SuperTopAds

போதைப்பொருளை கடத்திய ஆலாவிற்கு 14 நாட்கள் விளக்கமறியல்

ஆசிரியர் - Editor III
போதைப்பொருளை கடத்திய ஆலாவிற்கு 14 நாட்கள் விளக்கமறியல்

நீண்ட காலமாக பாடசாலை மாணவர்கள் உட்பட  இளைஞர்களுக்கு  போதைப்பொருட்களை விநியோகித்து வந்த ஆலா என்ற இளைஞனை 14 நாட்கள்  விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.

கடந்த வியாழக்கிழமை(4)   விசேட தகவல் ஒன்றினை அடுத்து அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்க வழிநடத்தலில்     பொலிஸ் குழுவினர் மருதமுனை கடற்கரை பிரதேசத்தில் சிவில் உடையில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் போது குறித்த ஆலா என்ற பறவையின் செல்லப்பெயர் கொண்ட 39 வயதுடைய முஹம்மது இஸ்மாயில் அஸ்மீர்  இயற்பெயருடைய  இளைஞனை பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர்.இவ்வாறு சுற்றி வளைக்கப்பட்ட இளைஞனின்  உடமையில் இருந்து   11 கிராம் 300 மில்லி கிராம்  கஞ்சாவினை மீட்டுள்ளது.

பின்னர் மறுநாள் வெள்ளிக்கிழமை (5) சட்ட நடவடிக்கைக்காக கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன்  சம்சுதீன் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது 14 நாட்கள்  விளக்கமறியலில் சந்தேக நபரை  வைக்குமாறு  உத்தரவிட்டார்.குறித்த ஆலா என்ற பறவையின் செல்லப்பெயர் கொண்ட சந்தேக நபர் இரண்டாவது தடவையாக போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைதாகி உள்ளமையும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

இதே வேளை 22 வயதுடைய இளைஞன் கடந்த புதன்கிழமை (3) போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.