SuperTopAds

விசாரணைக்கு சென்றிருந்த பொலிஸ் உத்தியோகஸ்த்தர் மீது சரமாரி தாக்குதல்!

ஆசிரியர் - Editor I
விசாரணைக்கு சென்றிருந்த பொலிஸ் உத்தியோகஸ்த்தர் மீது சரமாரி தாக்குதல்!

முறைப்பாடொன்று தொடர்பில் விசாரிப்பதற்காக சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை பொல்லால் தாக்கி காயப்படுத்திய சம்பவம் கண்டி, பூஜாப்பிட்டிய, போதொட்ட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (25) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. பூஜாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரொருவரே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.

தாக்குதலுக்குள்ளான பொலிஸ் உத்தியோகத்தர், இரண்டு சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாடு ஒன்று தொடர்பில் விசாரிப்பதற்காக பூஜாப்பிட்டிய, போதொட்ட பிரதேசத்திற்கு நேற்று (25) சென்றுள்ளார்.

இதன்போது, தாக்குதலுக்குள்ளான பொலிஸ் உத்தியோகத்தர், முறைப்பாட்டுடன் தொடர்புடைய இரண்டு சகோதரர்களையும் ஒன்றாக சந்தித்து முறைப்பாடு தொடர்பில் விசாரித்துக் கொண்டிருக்கும்போது 

இரண்டு சகோதரர்களில் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தரை பொல்லால் தாக்கியுள்ளார். இதனையடுத்து, காயமடைந்த பொலிஸார் உத்தியோகத்தர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தையடுத்து சந்தேக நபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.