உடற்பிடிப்பு நிலையத்திற்குள் புகுந்து கொள்ளை! சந்தேநபர் தலைமறைவு..
களுத்துறை - வாதுவை பிரதேசத்தில் உள்ள மசாஜ் நிலையமொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து 60 ஆயிரம் ரூபா பணத்தைத் திருடித் தப்பிச் சென்ற சந்தேக நபர் ஒருவர் தொடர்பில் வாதுவை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மசாஜ் நிலையத்தின் உரிமையாளர் கடந்த 17 ஆம் திகதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர், மசாஜ் நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த துணிகளை பயன்படுத்தி சிசிரிவி கமராவை மறைத்துவிட்டு பணத்தைத் திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாதுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.