கைது செய்ய சென்ற பொலிஸார் மீது மூர்க்கத்தனமான தாக்குதல்! இரு பொலிஸார் வைத்தியசாலையில், போதை ஆசாமி கைது..
ஹெரோயின் வைத்திருந்த நபரை கைதுசெய்யச் சென்ற இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் சந்தேகநபரால் தாக்கப்பட்டதாக துங்கல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,
சந்தேக நபர் நீர்கொழும்பு, பிட்டிபான பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். துங்கல்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும்
இரண்டு கான்ஸ்டபிள்களும் இலஞ்ச ஒழிப்புச் சுற்றிவளைப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.இதன்போது சந்தேக நபரை அவரது வீட்டில் வைத்து கைது செய்யச் சென்ற கான்ஸ்டபிள் ஒருவர் சந்தேக நபரால் தாக்கப்பட்டதுடன்,
மற்றுமொரு கான்ஸ்டபிளின் கையையும் கடித்ததாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்
என்பதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .