கிளிநொச்சியில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 35 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!
கிளிநொச்சி - தருமபுரம் மத்திய கல்லூரியில் பாடசாலைக் கற்றல் நடவடிக்கை இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாடசாலை வளாகத்தில் அமைந்துள்ள நாவல் மரம் ஒன்றில் அமைந்திருந்த பொிய குளவிக் கூடு கலைந்த நிலையில் மாணவர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
35 மாணவர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகி தர்மபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதுடன் தற்பொழுது 18 மாணவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவத்தில் நான்கு ஆசிரியர்களும் குளவி கொட்டுக்கு இலக்காகியதுடன், மூன்று ஆசிரியர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் தொடர்பாக அனத்த முகாமத்துவ பிரிவினர் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினர், பொலிசாருக்கும் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த குழுவினர்
இன்றைய தினம் மாலை அப்பகுதியில் இருக்கும் குளவிக் கூட்டினை எவருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் அகற்றுவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் தர்மபுரம் மத்திய கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி அனைத்து மாணவர்களும் உடனடியாக பாடசாலை வளாகத்தில் இருந்து பாதுகாப்பாக வீடுகளுக்கும்,
உறவினரிடமும் அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.