SuperTopAds

யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் வன் செயல்களுக்கு பின்னால் இராணுவம் இருப்பதாக கூறப்படுது அப்பட்டமான பொய்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் வன் செயல்களுக்கு பின்னால் இராணுவம் இருப்பதாக கூறப்படுது அப்பட்டமான பொய்..


யாழ்ப்பாணத்தில் வன்முறையில் ஈடுபடுவோருக்கும் இராணுவத்தினருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை அத்துடன் யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதாக பொய் பிரச்சாரங்களை மேற்கொள்ளவதாக யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேயர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியராச்சி தெரிவித்தார்.

பலாலியில் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றின் போது அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்

யாழில் வன்முறையில் ஈடுபடுவோருக்கும் இராணுவத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுவது தொடர்பாக கேள்வியெழுப்பிய போது இதற்கு பதிலளித்த கட்டளைத் தளபதி அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. 

இதற்கு இராணுவத்தினரின் பின்புலத்தில் தான் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுவது இது முற்றிலும் பொய்யான செய்தி இவ்வாறு பொய்யான செய்தியை வெளியிடுவோரை பார்த்து ஒன்றை கேட்க விரும்புகின்றேன். ஆவா குழு என பலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். 

அவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எங்காவது இராணுவத்தினருக்கும் எமக்கும் தொடர்பு இருக்கு என குறிப்பிட்டுள்ளார்களா எந்த ஆதாரத்தை வைத்து இராணுவத்தினர் பின்புலத்தில் செயற்படுகிறார்கள் என கூறுகிறார்கள் இந்த குழுக்கள் மீது பின்புலத்தில் செயற்பட வேண்டிய அவசியம் எமக்கு இல்லை.

மேலும் வடக்கில் இராணுவதினரின் எண்ணிக்கையை அதிகரிப்பதாக போலிப்பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் அது முற்றிலும் பொய்யான தகவலாகும் யுத்தம் முடிவுற்ற பின்னர் யாழ்ப்பாணத்தில் படையினரின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டு வருகின்றனவே தவிர புதிதாக வடக்கிற்கு இராணுவத்தினர் இணைத்துக் கொள்ளப்படவில்லை. .

யுத்தம் முடிவுற்ற பின்னர் யாழ்ப்பாணத்தில் சிவில் நிர்வாகத்தில் இராணுவம் தலையிடவில்லை பொலிஸாரே சிவில் சம்பந்தமான விடயங்களில் ஈடுபடுகின்றனர்.அவர்களுக்கு உதவிகள் வேண்டுமென்றால் பாதுகாப்பு அமைச்சுக்கு தொடர்புகொண்டு எமக்கு அங்கிருந்து கட்டளை வழங்கப்பட்டாலே நாம் சிவில் நடவடிக்கையில் ஈடுபட முடியும.எனினும் இவ்வளவு காலத்தில் அவ்வாறு இடம்பெறவில்லை.

யுத்தம் முடிவுற்ற பின்னர் நாம் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றோம். யுத்தம் முடிவுற்று 9 வருடங்களாகிய நிலையில் இராணுவத்திடம் உள்ள தனியார் காணிகளை உரியவர்களிடம் வழங்கும் வேலைத்திட்ட நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கான சமூக வேலைத்திட்டங்களில் நாம் முன்னெடுத்து வருகின்றோம்.

 என யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.