SuperTopAds

யுத்தம் நிறைவடைந்து 9 வருடங்களின் பின் புனரமைக்கப்படவுள்ள புதுக்குடியிருப்பு- வேணாவில் ஆரம்ப சுகாதார நிலையம்..

ஆசிரியர் - Editor I
யுத்தம் நிறைவடைந்து 9 வருடங்களின் பின் புனரமைக்கப்படவுள்ள புதுக்குடியிருப்பு- வேணாவில் ஆரம்ப சுகாதார நிலையம்..

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு -வேணாவில் பகுதியில் சேதமடைந்தநிலையில் காணப்பட்ட ஆரம்பசுகாதார நிலையத்தின் புனரமைப்புப்பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவின்கீழ் உள்ள வேணாவில் கிராமத்தில் 450 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழந்துவரும் நிலையில் இங்கே யுத்தத்தினால்சேதமடைந்து காணப்படுகின்ற ஆரம்ப சுகாதார நிலையம் புனரமைக்கப்படவில்லை. 

இதனை  புனரமைத்துத்தருமாறு இந்தப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக கேட்டுவந்தனா்.  கடந்த ஆண்டில் குறித்த ஆரம்பசுகாதார நிலையத்தினை புனரமைப்பதற்கான நிதியொதுக்கீடு செய்யப்பட்டபோதும், 

அதற்கான புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படாது குறித்த நிதி வேறு அபிவிருத்தி வேலைக்கு பயன்படுத்தப்பட்டது. இந்நிலையில் அண்மையில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தின் போது, 

இதனைப்புனரமைத்துதருமாறு கிராமமட்ட அமைப்புக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இதன் புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.