இறுதிப் போா்காலத்தில் பல லட்சம் மக்கள் பயன்படுத்திய பச்சை புல்மோட்டை வீதியை புனரமைத்து தருமாறு இரணைப்பாலை, புதுமாத்தளன் மக்கள் கோாிக்கை..

முல்லைத்தீவு புதுமாத்தளன் இரணைப்பாலை ஆகிய கிராமங்களை இணைக்கின்ற பச்சைப் புல்மோட்டை பகுதியில் சேதமடைந்து காணப்பட்ட பாலம் புனரமைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியையும இரணைப்பாலையையும் இணைக்கின்ற பச்சைப்புல்மோட்டை வீதி கடந்த இறுதி யுத்ததின் போது ஏராளமான மக்கள பயன்படுத்தி ஒரு வீதியாக காணப்படுகின்றது,
இந்த வீதி மிக மோசமாக சேதமடைந்து காணப்படுவதுடன், இந்த வீதியில காணப்பட்ட பச்சைப்புல் மோட்டைப் பாலம் சேதமடைந்த நிலையில் காணப்பட்டது.
குறித்த பாலத்தினையும்; வீதியினையும் புனரமைத்துத்தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதனையடுத்து ஆயிரம் கிராமியப்பாலங்களை அபிவிருததி செய்யும் திட்டத்தின் கீழ் பச்சைப்புல் மோட்டைப்பாலம் நிர்மானிக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு விடப்பட்டுள்ளது.