கழிவு வாய்க்காலில் குழாய் கிணறு அமைத்த அதிகாாிகள், அவதியுறும் இரணைப்பாலை மக்கள்..

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியில் மக்கள் பயன்படுத்தமுடியாத நிலையில் கழிவு வாய்க்காலில் அமைக்கப்பட்டுள்ள குழாய் கிணற்றினால் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பிரதான வீதியின் இரணைப்பாலை பகுதியில் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றினால் அமைக்கப்பட்ட குழாய்கிணறு உரிய இடம்தெரிவு செய்யப்படாது உரிய அனுமதிகள் பெறப்பாடாது கழிவு வாய்க்காலில் குழாய் கிணறு ஒன்று அமைககப்பட்டுள்ளது.
குடி நீர்த் தேவையுள்ள இந்தப் பிரதேசத்தில் அமைக்கப்பட் இந்த கிணறு கழிவு வாய்க்காலில் அமைக்கப்பட்டுள்ளதால் அதனைப்பயன்படுத்தமுடியாத நிலையில் காணப்படுவதுடன், மழைகாலங்களில் அதிகளவான கழிவு நீரைககொண்டு செல்லும் இக்கழிவு வாய்க்காலில்
வெள்ளம் வழிந்தோட முடியாத நிலையும காணப்படுகின்றது. அண்மையில் பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தின் போது. குறித்த வாய்ககால் ஊடாக நீர் வெளியேற முடியாது அருகில் உள்ள வீடுகளுக்குள வெள்ளம் புகுந்து கடும பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
இவ்வாறு மீள்குடியேற்றத்தின் பின்னரான அபிவிருத்திகள் உரிய திடடமிடல் இன்றி ஏற்பட்டதனால் இவ்வாறான பாதிப்புக்களை எதிர்கொள்வதாக பாதிக்கப்பட்டமக்கள் தெரிவிததுள்ளனர்.