இரு பிள்ளைகளை வீட்டில் தனியே விட்டு காதலனுடன் சென்ற பெண்! குழந்தைகளை மீட்ட பொலிஸார், தாய் குறித்து விசாரணை..
இரு பிள்ளைகளையும் வீட்டில் தனிமையில் விட்டுவிட்டு தனது காதலனுடன் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்ற தாய் தொடர்பில் குருணாகல் கும்புக்கெடே பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
7 வயது பெண் பிள்ளையையும் 2 வயதுடைய ஆண் பிள்ளையையும் தனிமையில் விட்டுவிட்டு குறித்த தாய் காதலனுடன் தப்பியோடியுள்ளார்.
பிள்ளைகள் இருவரும் தற்போது பொலிஸ் பாதுகாப்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் தந்தை வேலை காரணமாக வெளிநாடு சென்றுள்ள நிலையில் பிள்ளைகள் இருவரும் தாயின் பராமரிப்பின் கீழ் வாழ்ந்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், கடந்த 28 ஆம் திகதி இரு பிள்ளைகளும் வீட்டிற்குள் அழுதுகொண்டிருப்பதைக் கண்ட உறவினரொருவர் பிள்ளைகளிடம் தாயார் தொடர்பில் விசாரித்துள்ளார்.
இதன் பின்னர் இது தொடர்பில் குருணாகல் கும்புக்கெடே பொலிஸ் நிலையத்தில் குறித்த உறவினர் முறைப்பாடு அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரு பிள்ளைகளும் வீட்டிற்குள் உணவின்றி தவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.விசாரணையில் இரு பிள்ளைகளின் தாயார் அயல் வீட்டில் வசிக்கும் நபரொருவருடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்துள்ள நிலையில் பிள்ளைகளை வீட்டில் தனிமையில் விட்டுவிட்டு காதலனுடன் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குருணாகல் கும்புக்கெடே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.