7 வயது சிறுவனை தலைகீழாக கட்டிவைத்து அடித்த தாயும், தாயின் சகோதரனும் கைது!
28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஏறாவூர் சாதாட் கிராமத்தில் 7 வயது சிறுவனை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய 35 வயதுடைய குறித்த சிறுவனின் தாய் ஏறாவூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
பின்னர் குறித்த பெண்ணின் 24 வயதுடைய சகேதரரும் ஏறாவூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு 29 ஆம் திகதி புதன்கிழமை இருவரையும் ஏறாவூர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியபோது எதிர்வரும் 6ஆம் மாதம் 12ஆம் திகதி வரை இருவரையும் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இரண்டு சிறுவர்களையும் ஏறாவூர் ஆயிஷா லு அபூபக்கர் சித்திக் சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.