ஈரான் ஜனாதிபதியின் மறைவுக்கு இரங்கல் தொிவித்து இலங்கையில் நாளை துக்கதினம்..
ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணித்த உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளாகி அகால மரணமடைந்ததைத்தொடர்ந்து அனுதாபம் தெரிவிக்கும் வகையில் நாளை 21 ஆம் திகதி துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.