யாழ் பல்கலை மாணவர்களால் கிளிநொச்சியில் பரிமாறப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி
இனப்படுகொலைப் போரின் வலிகளை தலைமுறைகளிற்குக் கடத்தும் நோக்கில் தமிழர் தாயகமெங்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழக பீடங்களை அண்மித்த பகுதிகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களினால் முள்ளிவாய்க்கால்க் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தினை முன்னிட்டு தினமும் பல்வேறுபட்ட இடங்களில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டு வருகின்றது. அந்த வகையில் கிளிநொச்சியில் அமைந்துள்ள விவசாய பீடம், தொழில்நுட்ப பீடம், பொறியிற்பீட மாணவர்களினால் குறித்த கஞ்சி பரிமாறுதல் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இனப்படுகொலைப் போரின் போது தமிழ் மக்களின் உயிர் காத்த உணவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.