22 லட்சத்து 61 ஆயிரம் ரூபா செலவில் 48 தடவைகள் கொழும்பு சென்றுவந்த சீ.வி..

ஆசிரியர் - Editor I
22 லட்சத்து 61 ஆயிரம் ரூபா செலவில் 48 தடவைகள் கொழும்பு சென்றுவந்த சீ.வி..

வடக்கு மாகாண முதலமைச்சர் முன்னாள் வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் சந்திரசிறியின் மூலம்  பெற்ற விசேட அனுமதியின் பெயரில் 

யாழில் இருந்து கொழும்பிற்குச் சென்ற விமானப் பயணங்களிற்காக இதுவரையில் 22 லட்சத்து 61 ஆயிரம் ரூபா மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட பணத்தில் இருந்து செலுத்தப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வாகனத்தில் கொழும்பு சென்றுவந்த நிலையில் முன்னாள் ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி தான் கொழும்பிற்கு விமானம் மூலமே 

சென்று வருவதனால் முதலமைச்சரின் பயணத்திற்கும் மாகாணத்திற்கு ஒதுக்கீடு செய்யும் அரச நிதியில் அனுமதிக்கலாம் என விசேட அனுமதியினை வழங்கினார்.

மகிந்த ராயபக்சவினால் வழங்கப்பட்ட இந்த அனுமதியின்  பிரகாரம் 2014ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரையான 4 ஆண்டுகளில் வடக்கு 

மாகாண முதலமைச்சர் அரச செலவில் 48 தடவைகள் விமானம் மூலம் கொழும்பிற்கு சென்று வந்துள்ளார். இதற்காகவே குறித்த 22 லட்சத்து 61 ஆயிரம் ரூபா பணம் செலவு செய்யப்பட்டுள்ளது. 

இதன் பிரகாரம் முதலமைச்சர் 2014ம் ஆண்டில் 11 தடவைகளும் , 2015ம் ஆண்டில் 13 தடவைகளும் , 2016ம் ஆண்டில் 15 தடவைகளும் பறப்பில் ஈடுபட்டுள்ளதோடு 2017ம் ஆண்டில் 9 தடவைகள் பறப்பில் ஈடுபட்டுள்ளார். 

இவ்வாறு பயணித்த 48 தடவைகளும் தன்னுடன் ஓர் உதவியாளரையும் அழைத்துச் சென்றுள்ளார். அவ்வாறு அழைத்துச் சென்ற உதவியாளருக்கும் மாகாண சபையின் நிதியே வழங்கப்பட்டுள்ளது.

இவற்றின் அடிப்படையில் 2014 , 2015ம் ஆண்டுகளில் ஓரு சேவைக்காக 35 ஆயிரம் ரூபாவீதம் பணம் செலுத்தப்பட்ட நிலையில் 2016ம் ஆண்டு முதல் இன்றுவரையில் ஓர் சேவைக்காக 58 ஆயிரம் ரூபா வீதம் பணம் செலுத்தப்படுகின்றது. 

இதேநேரம் இலங்கையில் உள்ள 9 மாகாணங்களில்  வேறு எந்த மாகாண முதலமைச்சரிற்கும் குறித்த சலுகை தற்போதுவரையில் வழங்கப்படுவது கிடையாது..

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு