SuperTopAds

பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க சேமிக்கப்பட்டிருந்த அரிசி தரமற்றது - பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குற்றச்சாட்டு...

ஆசிரியர் - Editor I
பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க சேமிக்கப்பட்டிருந்த அரிசி தரமற்றது - பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குற்றச்சாட்டு...

பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்காக சேமித்து வைக்கப்பட்டுள்ள அரிசி கையிருப்பு தரமற்றது என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்காக வெயாங்கொடை அரச உணவு களஞ்சியசாலையில் சேமித்து வைக்கப்பட்டுள்ள அரிசியே தரமற்றது என அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.

பாடசாலை மாணவர்களின் போசாக்குத் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் இந்த அரிசித் தொகை வழங்கப்பட்டுள்ளது. 

தற்போதைய நிலவரத்தை கருத்திற்கொண்டு, குறித்த களஞ்சியசாலையில் இருந்து அரிசி இருப்புக்களை விடுவிப்பது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.