SuperTopAds

பொலிஸாரின் அறிவுறுத்தலை மீறி பயணித்த லொறி மீது துப்பாக்கி சூடு!

ஆசிரியர் - Editor I
பொலிஸாரின் அறிவுறுத்தலை மீறி பயணித்த லொறி மீது துப்பாக்கி சூடு!

கனங்கே தோலேலியத்த பிரதேசத்தில் பொலிஸாரின் தடை உத்தரவை மீறி பயணித்த லொறியொன்றின் மீது பொலிஸாரினால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கனங்கே ரஜமஹா விகாரையினை அண்மித்த பகுதியில் இன்று வியாழக்கிழமை (11) அதிகாலை 4.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரவு நேர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் குழுவினர் குறித்த லொறியினை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ள நிலையில், குறித்த லொறி உத்தரவை மீறி பயணித்துள்ளது.

இதன்போது உத்தரவை மீறி பயணித்த லொறி மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது ஒருவர் காயமடைந்துள்ளதுடன் இருவர் தப்பி ஓடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு காயமடைந்துள்ள நபர்  ஜிந்தோட்டை, மாபுகல பிரதேசத்தைச் சேர்ந்த மொஹமட் சியாம் என்பவராவார்.

மேலும், சந்தேகநபர் சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக  விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.