SuperTopAds

வர்த்தக நிலையத்தில் காயங்களுடன் 41 வயதான பெண் சடலமாக மீட்பு!

ஆசிரியர் - Editor I
வர்த்தக நிலையத்தில் காயங்களுடன் 41 வயதான பெண் சடலமாக மீட்பு!

உரகஸ்மன்ஹந்திய - மீகஸ்பிட்டிய பிரதேசத்தில் உள்ள கடையொன்றிலிருந்து பலத்த காயத்துடன் இரத்தம் கசிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக உரகஸ்மன்ஹந்திய பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் இந்தக்  கடையின்  உரிமையாளரின்  மனைவியான  யமுனா  நிரோஷினி என்ற 41 வயது பெண்ணாவார்.

இவர் தனது கணவருடன் இந்தக் கடையில் வசித்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் உரகஸ்மன்ஹந்திய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.