ஹோட்டல் அறையில் 23 வயது பெண் சடலமாக மீட்பு!
அவிசாவளை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட மனமேந்து மாவத்தை பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றின் அறையொன்றில் தங்கியிருந்த யுவதி ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் வலப்பனை பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய யுவதியாவார்.
குறித்த யுவதி புதன்கிழமை (10) மாலை இளைஞரொருவருடன் குறித்த ஹோட்டலுக்கு சென்றுள்ள நிலையில், இருவரும் அங்குள்ள அறையொன்றில் தங்கியிருந்துள்ளனர்.
இதன்போது, குறித்த யுவதி திடீரென மயங்கி விழுந்துள்ளதாக அவருடன் தங்கியிருந்த இளைஞன் ஹோட்டல் நிர்வாகத்திற்குத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அவிசாவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.