துவிச்சக்கர வண்டியில் சென்ற மாணவனை மோதி தள்ளிய தனியார் பேருந்து..

ஆசிரியர் - Editor I
துவிச்சக்கர வண்டியில் சென்ற மாணவனை மோதி தள்ளிய தனியார் பேருந்து..

வவுனியா பத்தினியார் மகிழங்குளம் பகுதியில் பாடசாலைக்கு சென்ற மாணவனை பஸ் மோதியதில் மாணவன் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (08) இடம்பெற்றுள்ளது. பத்தினியார் மகிழங்குளம் நோக்கி வந்த பஸ் அதே திசையில் புதுக்குளம் பாடசாலைக்கு துவிச்சக்கர வண்டியில் சென்ற மாணவனை மோதியதிலேயே மாணவன் படுகாயமடைந்தார்.

காயமடைந்த மாணவன் வவுனியா பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு