நாங்கள் எப்படி பார்த்தாலுல், நினைத்தாலும் சிங்களவர்கள் சிங்களவர்களே..

ஆசிரியர் - Editor I
நாங்கள் எப்படி பார்த்தாலுல், நினைத்தாலும் சிங்களவர்கள் சிங்களவர்களே..

இலங்கையில் அமைச்சுப் பொறுப்பிலுள்ள தமிழ் அமைச்சர் ஒருவர் அவர்களின் இனம்சார்ந்து மொழி சார்ந்து ஒரு வார்த்தை கூடப்பேசமுடியாது.

தங்களை அடையாளப்படுத்த முடியாதவர்களாக உள்ளனர் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி அக்கராயன் அம்பலபெருமாள் சந்தியி ல்  13ம் நூற்றாண்டில் இப்பிரதேசத்தை ஆட்சி செய்த குறுநில மன்னரான அக்கிராயன் மன்னனின் உருவச்சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் (05-07-2018) உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்  மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் உரையாற்றுகையில், இன்றைய நாள் கூட எங்கள் வரலாற்றில் ஒரு மறக்கமுடியாத நாள் கந்தகம் சுமந்த வரலாறு படைத்தவர்களை அடையாளப்படுத்தும் நாள். 

தமிழ் வரலாற்றில் பல திருப்பங்களை ஏற்படுத்திய கரும்புலிமில்லரின் தாக்குதல் அமைகின்றது. இந்த நாளில் தான் இந்த மண்ணினை ஆண்ட ஒரு 

மன்னனுடைய மக்களுக்காக ஆண்ட ஆக்கிராய மன்னனுடைய வரலாற்றை அடையாளப்படுத்துகின்றோம்.

பல வரலாறுகள் எங்கள் முன்னால்  இருக்கின்றது. வரலாற்றுக் காலங்களில் எங்கள் போரட்டங்கள் தோற்றுப்போனதா? 

ஆல்லது மௌனித்திருக்கின்றதா, என்ற கேள்வி எங்கள் முன் எழுந்து நிற்கின்றது. பண்டாரவன்னியன் காலத்தில் துரோகங்கள் மூலம் தோற்றுப்போயிருக்கின்றோம்.

அல்லது போராட்டம் மௌனிக்கப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து சங்கிலியன் காலத்திலும்பிரபாகரனின் காலத்திலும அது தான் நடந்திருக்கின்றது.

நாங்கள் விழவிழ எழுந்திருக்கின்றோம், கடந்த காலத்தில் எழுநூறு ஆண்டுகளுக்கு இந்த மண்ணில் நாங்கள் எழுச்சிகொண்டிருக்கின்றோம், 

எழுச்சிகொள்ளும் காலங்களிலும் நாங்கள் தோற்கடிக்கப்படடிருக்கின்றோம், போராட்டத்தின் பால் எங்கோ ஒரு மூலையில் தள்ளப்படுகின்றோம்,

ஆனால் மீண்டும்மீண்டும் நாங்கள்எழுந்திருக்கின்றோம், அந்த எழுச்சிதான் இன்றும்கூட அந்த அடையாளத்தை தந்திருக்கின்றது.

வரலாறும் வரலாற்று அடையாளங்களும் எங்களுக்கு பல பாடங்களைத்தந்திருக்கின்றன.

இந்த மண்ணில் தமிழர்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் எங்களுக்கான ஒரு உரித்து இல்லாது வரையும் எங்களை நாங்கள் ஆழுகின்ற ஒரு ஆட்சி முறை 

இன்மையாலும் நாங்கள் இந்த மண்ணில் வாழமுடியாது என்பதற்கு கடந்த கால வரலாறுகள் சாட்சியாக இருக்கின்றது.

அண்மை நாட்களாக இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவர்கள் தெரிவித்த கருத்தை சிங்கள தலைவர்களும அரசியல் 

வாதிகளும் எவ்வாறு பார்க்கின்றார்கள் என்று திரும்பிப்பார்த்தால் அவர்களின் மனங்களில் நீறு பூர்த்த நெருப்பாக இருக்கின்ற இனவாதம் எவ்வாறு இழம்பியுள்ளது என்று காணமுடிகின்றது.

அமைச்சர் விஜயகலா எந்தக்கட்சி என்னசொன்னார் என்பதல்ல, அவர் ஒரு தமிழ்ப்பெண்ணாக இருந்து மேற்படி கருத்தை சொன்ன காரணத்தினால் 

சிங்கள மக்களிடம் இருந்து வாக்குகளை கவரவேண்டும் என்ற காரணத்திற்காக சிங்கள தலைமைகள் எடுத்திருக்கின்ற முடிவுகளை எங்களால் அவதானிககமுடிகின்றது.

பலர் எங்களைக்கேட்கின்றார்கள், நீங்கள் அமைச்சுப்பொறுப்புக்களை எடுத்தலால் அதன் மூலம் அபிவிருத்தி செய்யலாம்.

பலதை சாதிக்கலாம் என்று ஆனால் விஜயகலா ஒரு அமைச்சர் இதற்கு முன்பும் தமிழ் அமைச்சர்கள் இருந்திருக்கின்றார்கள்.

 இப்போதும் இருக்கின்றார்கள், ஆனால் அவர்களால் தமது இனம்சார்ந்து மொழி சார்ந்து ஒரு வார்த்தைகூட பேசமுடியாது,

தங்களை அடையாளப்படுத்தமுடியாதவர்களாக உள்ளனர் எனத்தெரிவித்த அவர், முன்பெல்லாம் கப்பல்களில் ஆயுதங்கள் வந்தபோது, 

கப்பல்களை அழித்தார்கள், இப்போது கப்பல்களில் கஞ்சாவருகின்றார்கள், அவற்றைக்கட்டுப்படுத்தமுடியவில்லை. 

வாள்வெட்டு கலாச்சாரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இவையெல்லாம் இராணுவ மேலாதிக்கத்துணையுடன் இடம்பெறுகின்றது. 

இதைத்தான் இராஜாங்க அமைச்சர அவர்கள் பெண்கள் சிறுவர்கள் தொடர்பாக இதனைத்தடுப்பதென்றால் அவர்களை விட வேறு 

யாராலும் முடியாது என்று ஒரு காலத்தின் பதிவை குறிப்பிட்டதனால் அதனை சி;ங்களத்தலைவர்கள்  மக்களிடம் இருந்த இனவெறி எவ்வாறு வெளிவந்துள்ளது என்பதை நாங்கள் பார்க்கின்றோம்,

 காலங்களை நாங்கள் எப்படிப்பார்த்தாலும் சிங்களம் சிங்களமாகவே உள்ளது, எந்த மாற்றங்களும் இல்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு