சிறுத்தை புலியை கொலை செய்த 10 பேர் பிணையில் விடுதலை..
கிளிநொச்சி - அம்பாள்குளம் பகுதியில், சிறுத்தையொன்றை படுகொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டவர்களை தலா 5 ஆயிரம் ரூபாய் காசுப்பிணையிலும் தலா இரண்டுஇலட்சம் ரூபா ஆட்பிணையிலும் செல்ல நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிளிநொச்சி - அம்பாள்குளம் கிராமத்தில், கடந்த 21ஆம் திகதி வியாழக்கிழமை, காலை 7 மணி முதல் பிற்பகல் 12.30 மணிவரையான காலப்பகுதியில்,
வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர் ஒருவர் உட்பட பத்து பேரை சிறுத்தை தாக்கிக் காயப்படுத்தியதையடுத்தியது இதனையடுத்து குறித்த சிறுத்தை ஊர்மக்களால் கொல்லப்பட்டது
இதனையடுத்து கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் சிறுத்தையொன்றை கொலை செய்த சம்பவம் தொடர்பில் இன்று(05-07-2018)முற்படுத்தப்பட்ட
பத்து சந்தேக நபரகளையும் நிபந்தனைகளுடன் கூடிய பிணையில் செல்ல கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் (29-06-2018) இச்சம்பவத்துடன் தொடர்புபட்டதாகக் கருதப்படும் பத்துப்பேர்
கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் நீதிமன்ற நீதிவான் மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது சந்தேக நபர் சார்பாக ஆயரான திருமதி எஸ்.விஜயராணி, சம்பவதினத்தன்று 7.45 மணிக்கு குறித்த சிறுத்தை ஊர்மனைக்குள் வந்தது
தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு ஊர் மக்களாலும் கிராம மட்ட அமைப்புக்களாலும் அறிவிக்கப்பட்டிருந்த போதும், அவர்கள் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காது காலம் தாழ்த்தி 8.30 மணிக்குப்பின்னரே அங்கு வந்ததாக கூறினார்.
அதன் பின் சிறுத்தையை பிடிக்கமுற்பட்டபோது வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி ஒருவர் சிறுத்தையின் தாக்கத்திற்கு உள்ளாகியபோது அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று விட்டு
12.30 மணிவரைக்கும் குறித்த சிறுத்தையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் இதில் பொலிசாரும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் கடமையை சரியாகச் செய்யாமல் இருந்துள்ளனர்.
இதனையடுத்து மக்களைப் பாதுகாக்கும் வகையிலும் ஏற்கனவே சிறுத்தை தாக்கத்திற்கு உள்ளாகிய பத்துப்பேர் வரையில் பாதிக்கப்பட்டமை தொடர்பிலும் ஆத்தரமடைந்த மக்கள் இவ்வாறு இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டிருக்கின்றார்கள்
என்றும் குறித்த பத்துபேரையும் பொருத்தமான பிணையில் செல்ல நீதிமன்றம்அனுமதிக்கவேண்டும் என்றும் பிணை விண்ணப்பத்தை முன்வைத்தார்.
இதேவேளை, வழக்குத் தொடுனர் தரப்பில் முன்னிலையான கிளிநொச்சிப் பொலிசார், குறித்த சிறுத்தை பொதுமக்களுக்கு எந்தவிதமான இடையூறுகளையும் ஏற்படுத்தவில்லை என்றும்
இந்த சிறுத்தை கொலை செய்யப்பட்டமை தொடர்பில் பாராளுமன்ற மன்றத்திலும வாதங்கள் இடம்பெற்றிருக்கின்றன என்றும் சுட்டிக்காட்டினர்.
இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளும் பொருடடு மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள்
முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், மேலும் பலரை கைது செய்யவேண்டியிருப்பதாகவும் தெரிவித்தனர்.
இந்த நிலையில் குறித்த பத்துப்பேரையும பிணையில் செலல அனுமதித்தால் விசாரணைகளை முன்னெடுப்பதிலும் மேலும் சந்தேக நபர்களை கைது செயவதிலும் பாதிப்புககள் ஏற்படலாம் என ஆட்சேபனை தெரிவித்தனர்.
இதனால் குறித்த பத்துபபேரையும் எதிர்வரும் இன்று 3ம்திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் (03-07-2018) மீண்டும் மாவட்ட பதில் நீதிவான் ம. கிறேசியன் முன்னிலையில் ஆஜர் படுத்தியதையடுத்து
மீண்டும் 10 பேரையும் எதிர்வரும் 05ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு இன்று(05-07-2018) மீண்டும் குறித்த பத்துப்பேரையும் ஆயர்படுத்தப்பட்டதையடுத்து
சட்டத்தரணிகளான திருமதி எஸ்.விஜயராணி, அர்ச்சுனா, தர்சா, சோபிகா ஆகியோர் குறித்த சந்தேக நபர்;கள் சார்பாக ஆயராகி தமது பிணை விண்ணப்பத்தினை முன்வைத்தனர்.
10 பேரையும் தலா ஐயாயிரம் ரூபா காசுப்பிணையிலும் தலா இரண்டுஇலட்சம் ரூபா ஆட்பிணையிலும் செல்ல நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.