அமைச்சு பதவியை தூக்கி எறியபோகும் விஐயகலா மகேஷ்வரன்..

ஆசிரியர் - Editor I
அமைச்சு பதவியை தூக்கி எறியபோகும் விஐயகலா மகேஷ்வரன்..

தமிழீழ விடுதலை புலிகள் குறித்து பேசியமையினால் எழுந்துள்ள சர்ச்சைகளை தொடர்ந்து இராஜாங்க அமைச்சர் விஐயகலா மகேஷ்வரன் பதவி விலகும் தீர்மானத்தை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியா கியுள்ளது.

ஐனாதிபதியின் சேவை தேசிய நிகழ்ச்சி திட்டம் கட ந்த சில தினங்களுக்கு முன் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அமைச்சர் விஐயகலா தமிழீழ விடுத லை புலிகள் காலத்தில் வன்செயல்கள் இடம்பெறவில்லை என கூறியதுடன்.

புலிகளை வடகிழக்கில் மீள் உருவாக்கம் செய்ய வேண்டும் எனவும் கூறினார். இதனையடுத்து தென்னிலங்கையில் அமைச்சருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பபட்டதுடன் இனவாதிகள் அமைச்சருக்கு எதிராக போர் கொடி தூக்கியிருந்தனர்.

இந்நிலையில் இன்று மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரவித்திருக்கும் அமைச்சர் திருமதி விஐயகலா மகேஷ்வரன் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இதனையடுத்து சமூக வலைத்தளங்களில் அமைச்சருக்கு ஆதரவாக கருத்துக்கள் கூறப்பட்டு வருகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு