SuperTopAds

பொதுமக்களை தாக்கிய பொலிஸ் பொறுப்பதிகாரி கைது, தற்காலிக பணி நீக்கம்...

ஆசிரியர் - Editor I
பொதுமக்களை தாக்கிய பொலிஸ் பொறுப்பதிகாரி கைது, தற்காலிக பணி நீக்கம்...

பொதுமக்கள் இருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் உடப்பு பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது, 

தாக்குதலில் காயமடைந்த இரு பொதுமக்கள் உடப்பு கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, சம்பவத்தில் காயமடைந்தத பொலிஸ் குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று புதன்கிழமை (06) காலை வைத்தியசாலையில் வைத்து கைதுசெய்யப்பட்டதோடு, பணியிலிருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

சம்பவத்தின் போது அவர் மதுபோதையில் இருந்தாரா இல்லையா என்பதை அறிய இரத்த மாதிரிகளும் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.