யாழ்.மாவட்டச் செயலர் ஓய்வு பெற்றார், பதில் மாவட்டச் செயலராக ம.பிரதீபன்..
யாழ்.மாவட்டச் செயலராக பணியாற்றிய அ.சிவபாலசுந்தரன் இன்றுடன் ஓய்வுபெற்றுச் செல்லும் நிலையில் யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் பதில் மாவட்டச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.யாழ்ப்பாண மாவட்ட செயலாளராக இருந்த அ.சிவபாலசுந்தரன் ஒய்வு பெற்றுச் சென்ற நிலையிலேயே பிரதீபன் பதில் அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய அரசாங்க அதிபர் ஒருவர் நியமிக்கப்படும் வரை பதில் அரசாங்க அதிபராக இவர் கடமை ஆற்றுவார்.