சாதனை மாணவர்களுக்கு வான் சுற்றுலா..

ஆசிரியர் - Editor I
சாதனை மாணவர்களுக்கு வான் சுற்றுலா..

இலங்கை விமானப் படையின் ஏற்பாட்டில் வடக்கு மாகாணத்தில் பல்வேறுபட்ட துறையிலும் சாதித்த மாணவர்களுக்கு வானத்தில் சுற்றுலா சென்றனர்.

இலங்கை விமானப் படையின் 73 ஆண்டு நிறைவை வடக்கு மாகாணத்திலும் யாழ்ப்பாணத்திலும் விசேட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனொரு அங்கமாக வடக்கு மாகாணத்தில் கல்வி விளையாட்டு என பல்வேறுபட்ட துறையிலும் சாதித்த 20 மாணவர்களை உலங்கு வானூர்தியில் ஏற்றிச் சென்று யாழ்ப்பாணத்தை 20 நிமிடங்கள் சுற்றி பார்க்க வாய்ப்பு இலங்கை விமானப் படையினரால் வழங்கப்பட்டது.

யாழ்.இந்துக் கல்லூரி மைதானத்தில் மாணவர்களை ஏற்றிய விமானப் படை உலங்கு வானூர்தி யாழ்ப்பாணத்தின் கரையோரப் பகுதிகளை சுற்றி வட்டமிட்டதுடன் மீண்டும் கல்லூரி மைதானத்தில் தரையிறங்கியது.

இது எமக்கு புதிய அனுபவம் என தெரிவித்த பாடசாலை மாணவர்கள் இலங்கை விமானப் படைக்கு நன்றி தெரிவித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு