நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் எரிபொருட்களின் விலைத் திருத்தம்!

ஆசிரியர் - Editor I
நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் எரிபொருட்களின் விலைத் திருத்தம்!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் திருத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இதன்படி, 92 ரக பெற்றோல், மற்றும் டீசலின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை. இதேவேளை, 95 ரக பெற்றோல் 9 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலையாக 447 ரூபா குறிப்பிடப்பட்டுள்ளது.

சூப்பர் டீசலின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 458 ரூபாவாகும். மண்ணெண்ணெயின் விலை லீற்றருக்கு 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 257 ரூபாவாகும்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு