அவுஸ்திரேலியாவில் பேராயருக்கு ஓராண்டு சிறை: ஏன் தெரியுமா?
அவுஸ்திரேலியாவில் பாதிரியார் ஒருவர் இரண்டு சிறுவர்களை பாலியல் ரீதியாக பயன்படுத்தியதை மறைத்த பேராயருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் Hunter Valley பகுதியில் உள்ள தேவாலயத்தில் 1970 ஆம் ஆண்டுகளில் பாதிரியாராக இருந்த James Fletcher என்பவர், இரண்டு சிறுவர்களை பாலியல் ரீதியாக பயன்படுத்தியுள்ளார்.
இந்த தகவல் தெரிந்தும் அதனை பொலிசாருக்கு தெரிவிக்காமலும், பாதிரியாரை கண்டிக்காமலும் இருந்ததாக, தேவாலய பேராயர் பிலிப்புக்கு தற்போது ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நியூகேஸ்டல் நீதிமன்றம் இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.