யாழ்.போதனா வைத்தியசாலையில் டெங்கு காய்ச்சலால் இருவர் உயிரிழப்பு!
யாழ்ப்பாணத்தில் டெங்கு காய்ச்சலினால் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளன.
கொக்குவில் பகுதியில் மயங்கி விழுந்த, அரியாலை பகுதியை சேர்ந்த செல்வராசா சிந்துஜன் (வயது 31) எனும் இளைஞனை மீட்டு ,
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்துள்ளார். பரிசோதனையின்போது அவருக்கு டெங்கு தொற்று இருந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அதேவேளை முல்லைத்தீவு மல்லாவி பகுதியை சேர்ந்த ஒருவர் டெங்கு தீவிரமான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று அந்த நிலையில் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.