யாழ்.நகரில் மோப்ப நாய்கள் சகிதம் விசேட தேடுதல் வேட்டையில் பொலிஸார்..

ஆசிரியர் - Editor I
யாழ்.நகரில் மோப்ப நாய்கள் சகிதம் விசேட தேடுதல் வேட்டையில் பொலிஸார்..

யாழ்.நகரப் பகுதியில்  பொலிசாரால் விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன்பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நாடு முழுவதிலும் பொலிஸ்மா அதிபரின் பணிப்பிற்கமைய போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள்  முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்,

யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியகட்சகர் ஜெகத் நிஷாந்தவின் வழிகாட்டுதலில்  பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகரின் நெறிப்படுத்தலில் கீழ் நேற்று இரவு  யாழ்.நகர பகுதியில் பொலிசாரால்  விசேட போதைப்பொருள் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது

யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையப் பகுதி மற்றும் யாழ்.நகர்ப்பகுதி  வர்த்தக நிலையங்களிலும்  பொலிசாரினால் மோப்ப நாய்களின் உதவியுடன்  விசேட போதைப் பொருள் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு