வடகிழக்கு மக்கள் நின்மதியாக வாழவேண்டுமானால் வடகிழக்கில் தமிழீழ விடுதலை புலிகளை மீள உருவாக்கவேண்டும்...
வடகிழக்கு மாகாணங்களில் தமிழீழ விடுதலை புலிகளின் கை ஓங்கவேண்டும். வடகிழக்கு மாகாணங்களில் தமிழீழ விடுதலை புலிகளை உருவாக்கவேண்டும். அப்போதுதான் மக்கள் நின்மதியாகவும், சுதந்திரமாகவும் வாழலாம்.
மேற்கண்டவாறு இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் கூறியுள்ளார். ஜனா திபதியின் மக்கள் சேவை திட்டத்தின் 8வது தேசிய நிகழ்ச்சி திட்டம் இன்று யாழ்ப்பாணத்தி ல் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். இதன்போது அமைச்சர் மேலும் கூறுகையில்,
தலையால் நடந்தே ஜனாதிபதியை நாங்கள் தேர்வு செய்தோம். ஆனால் ஜனாதிபதி எங்களுக்கு என்ன செய்தார்? தமிழீழ விடுதலை புலிகள் காலத்தில் நாங்கள் எப்படியான வாழ்க்கை வாழ்ந்தோம்.
என்பது எங்கள் அனைவருக்குமே தெரியும். எனவே வடகிழக்கு மாகாணங்களில் மக்கள் நின்மதியாக வாழவேண்டுமானால், எங்களுடைய பிள்ளைகள் நின்மதியாக வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பவேண்டுமாக இருந்தால்
தமிழீழ விடுதலை புலிகளின் கைகள் வடகிழக்கு மாகாணங்களில் ஓங்கவேண்டும். தமிழீழ விடுதலை புலிகளை வடகிழக்கு மாகாணங்களில் உருவாக்கவேண்டும். யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் பாடசாலை சிறுமி கொரூரமாக படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்.
இதனை தடுப்பதற்கு இந்த அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது ஒன்று மில்லை. சில காணிகளை மக்களிடம் மீளவும் கொடுத்ததை தவிர இந்த அரசாங்கம் ஒ ன்று மே செய்யவில்லை.
உள்நாட்டலுவல்கள் அமைச்சின் தகவலின் படி யாழ்.மாவட்டத்தில் மட்டும் சுமார் 30 ஆயிரம் பெண் தலமைத்துவ குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அவர்களுக்கு இந்த அரசாங்கம் என்ன செய்திருக்கிறது?
வடகிழக்கில் 12 ஆயிரம் முன்னாள் போராளிகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களு க்கு கிடைக்கவேண்டிய உதவிகளையும் கூட வழங்கவேண்டாம் என ஜனாதிபதி தடுக்கிறார். மண்ணின் விடுதலைக்காக ஆயுதங்களை ஏந்தி போராடியதற்காக
முன்னாள் போராளிகள் மனிதர்கள் இல்லையா? எதற்காக அவர் களுக்கு கிடைக்கவேண்டிய உதவிகளை கிடைக்கவிடாது ஜனாதிபதி தடுக்கிறார் என்றால் அவர் தெற்கில் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக மட்டுமே.
அதேபோல் முன்னய ஆட்சியாளர்கள் வடகிழக்கு மக்களுக்கு என்ன செய்தார்களோ அதi னயே ஒரு மாற்றமும் இல்லாமல் இந்த ஆட்சியாளர்களும் செய்து கொண்டிருக்கின்றார்கள் என்றார்.