லொறிச் சாரதியின் மனிதாபிமானமற்ற செயல், நடுவழியில் காயத்துடன் கிடந்த முதியவர் உயிரிழந்த சோகம்..
பூகொடை பிரதேசத்தில் நபரொருவர் மீது லொறி மோதி இடம்பெற்ற விபத்தில் காயமடைந்தவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதாக கூறி வழியில் விட்டுவிட்டு தப்பிச்சென்ற லொறி சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காயமடைந்தவர் பிரதேசவாசிகளால் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் பெபிலியவல பிரதேசத்தை சேர்ந்த 83 வயதுடையவராவார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய லொறி சாரதி ஹோமாகம பிரதேசத்தில் வைத்து விபத்தில் சேதமடைந்த லொறியை சரிசெய்து கொண்டிருக்கும் போதே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.