SuperTopAds

இராணுவத்தின் மனித வலுவுடன் வடகிழக்கு மாகாணங்களில் 75குளங்கள் புனரமைப்பு..

ஆசிரியர் - Editor I
இராணுவத்தின் மனித வலுவுடன் வடகிழக்கு மாகாணங்களில் 75குளங்கள் புனரமைப்பு..

கிராம சக்தி திட்டத்தின் கீழ் வடகிழக்கு மாகா ணங்களில் சுமார் 75 குளங்களை புனரமைப் பு செய்வதற்கான நிதி கிடைக்கவுள்ளது.

நேற்று முன்தினம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலிலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டது.

குறித்த திட்டம் தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்ணான்டோ தலமையில் இடம்பெற்றது. 

இச் சந்திப்பில் இலங்கையின் வரட்சி வலயங்கள் உள்ளடங்கும் 5 மாகாணங்களான வடக்கு , கிழக்கு , 

தெற்கு , ஊவா , வட மேல் மாகாண பிரதம செயலாளர்கள் நீர்ப்பாசண மற்னும் மகாவலி அமைச்சுக்களின் அதிகாரிகள் விவசாய 

அமைச்சு போன்றவற்றின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். மேற்படி சந்திப்பில் நாடு பூராகவும் மேற்கொள்ளும் இத் 

திட்டத்திற்காக விசேடமாக 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்போது இயந்திரப் பாவனையினைத் தவிர்ந்த மனித 

வலுக்கள் கண்டிப்பாக உள்ளூர் மக்களே பயன்படுத்த வேண்டும். அதேநேரம் இயந்திர வலிவிலும் செலவை மீதப்படுத்துவதற்காக 

இராணுவத்தினரை பயன்படுத்துவதாக திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த திட்டத்தில் இராணுவத்தினரை பயன் படுத்துவதில்லை 

எனில் ஒதுக்கப்படும் நிதியில் குறைந்தளவு குளங்களே புனரமைக்க முடியும். இவற்றினைக் கருத்தில்கொண்டு 

உடனடியாக இவற்றிற்கான திட்ட அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது. இதேநேரம் 

இராணுவத்தினரின் பயன்பாடானது இயந்திரப் பயன்பாடுகளிற்கு மட்டுமே உபயோகிக்கப்படும் . எனவும் தெரிவித்துள்ளனர்.