SuperTopAds

காசா மீதான போரில் இஸ்ரேல் செலவிட இருக்கும் மொத்த தொகை!

ஆசிரியர் - Admin
காசா மீதான போரில் இஸ்ரேல் செலவிட இருக்கும் மொத்த தொகை!

இஸ்ரேல் 48 பில்லியன் டொலர்களை காசாவில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக செலவிடும் என தகவல் வெளியாகியுள்ளது. கத்தார் நாட்டின் மத்தியஸ்த செயல்பாடு மூலம் ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே 4 நாட்கள் போர் நிறுத்த உடன்படிக்கை வெள்ளிக்கிழமையான இன்று முதல் அமுலுக்கு வருகிறது.     

இதன் மூலம் காசா மக்களுக்கான மனிதாபிமான உதவிகள் மற்றும் பிணைக் கைதிகள் விடுவிப்பு ஆகியவை உறுதி செய்யப்படும் என தெரியவருகிறது.

இந்நிலையில் காசாவில் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள இஸ்ரேல் 48 பில்லியன் டொலர்களை செலவழிக்கும் என நிபுணர்களின் பகுப்பாய்வை மேற்கோள்காட்டி ப்ளூம்பெர்க் தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் இந்த தொகையில் மூன்றில் ஒரு பங்கை அமெரிக்கா வழங்குகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நிதி அமைச்சக அதிகாரி யாலி ரோட்டன்பெர்க் ப்ளூம்பெர்க்கிடம் வழங்கிய தகவலில், விரோதப் போக்கின் தற்கால நிலைமையை விட மிகவும் மோசமான நிலைமையில் கூட மாநிலங்களுக்கு நிதி அளிக்கும் அளவுக்கு நாங்கள் திறமையானவர்கள் என்று தெரிவித்துள்ளார்.