கொடூர கொள்ளையில் ஈடுபடும் ஜட்டி காங்!! -பீதியில் உறையும் மக்கள்-

ஆசிரியர் - Editor II
கொடூர கொள்ளையில் ஈடுபடும் ஜட்டி காங்!! -பீதியில் உறையும் மக்கள்-

இந்தியாவின் திருப்பதியில் ஜட்டி காங் என அழைக்கப்படும் கொடூர கொள்ளை கும்பல் ஒன்று தொடர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றது.

ஆந்திர மாநிலம் திருப்பதியில்  ஜட்டி காங் என்ற கொடூரமான கொள்ளை கும்பல் ஒன்று தன்னுடைய கைவரிசையை தொடர்ந்து காட்டி வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

இவர்கள், இரவு நேரத்தில் ஆட்கள் குறைந்த பகுதியில் கொள்ளை அட்டூழியத்தை காட்டி வருவதாக தெரியவந்துள்ளது.

மேலும், இரவு நேரத்தில் வீட்டின் அழைப்பு மணி அடிக்கும் சத்தம் கேட்டாலோ, வினோத சத்தம் கேட்டாலோ அல்லது தண்ணீர் வெளியேறுவது போன்ற சத்தம் கேட்டாலோ பொதுமக்கள் யாரும் உடனடியாக வெளியே சென்று பார்க்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் எளிதில் சிக்கி கொள்ளாமல் இருப்பதற்காக ஜட்டி மட்டுமே அணிந்து கொண்டு கொள்ளை முயற்சியில் ஈடுபடுவதாகவும், கையில் கூர்மையான ஆயுதங்கள் வைத்து அச்சுறுத்தல் செய்வதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், இவர்கள் கொலை கூட செய்ய அஞ்சமாட்டார்கள் எனவும்  எச்சரித்துள்ளனர்.

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு