லொத்தர் சீட்டில் இலக்கம் ஒன்றை மாற்றி 2 ஆயிரம் ரூபாய் பணம் பெற முயன்ற சிப்பாய் கைது!
தேசிய லொத்தர் சபைக்குச் சொந்தமான சீட்டு ஒன்றின் இலக்கத்தை சூட்சுமமாக மாற்றி 2,000 ரூபாவை பெற முயன்ற சந்தேகத்தில் இராணுவ வீரர் ஒருவரை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபையின் களுத்துறை மாவட்ட விநியோகஸ்தர் செய்த முறைப்பாட்டுக்கமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பிரதேசத்தின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர் இராணுவ முகாம் ஒன்றில் பணிபுரியும் பயாகல பிரதேசத்தில் வசிப்பவர் என தெரிய வந்துள்ளது.