யாழ்.வடமராட்சி கிழக்கில் வெள்ளை வாகனத்தில் வந்த கும்பல் வீடு புகுந்து துணிகர கொள்ளை!!

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சி கிழக்கில் வெள்ளை வாகனத்தில் வந்த கும்பல் வீடு புகுந்து துணிகர கொள்ளை!!

யாழ்.வடமராட்சி கிழக்கில் வெள்ளை வேனில் வந்தவர்கள் வீடு புகுந்து 5 இலட்ச ரூபாய் பணம் மற்றும் அரை பவுண் சங்கிலி என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

வடமராட்சி கிழக்கு, வத்திராயன் பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வெள்ளை நிற வேனில் சென்ற கும்பல் ஒன்றும் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து, வீட்டில் இருந்தவர்களின் அடையாள அட்டையை காண்பியுங்கள் என மிரட்டி அவர்களின் அடையாள அட்டைகளை பரிசோதித்துள்ளனர்.

பின்னர் வீடு புகுந்து சோதனையிட்ட கும்பல், வீட்டின் உரிமையாளர் காணி ஒன்றினை கொள்வனவு செய்வதற்காக வைத்திருந்த 5 இலட்சம் ரூபாய் பணத்தினையும், அதனுடன் இருந்த அரை பவுண் சங்கிலியையும் எடுத்து சென்றுள்ளனர்.

தம்மை அடையாளப்படுத்தாது, வீட்டினுள் திடீரென புகுந்து அடையாள அட்டைகளை பரிசோதித்து, வீட்டினையும் சோதனையிட்டு, பணத்தினை எடுத்து சென்றமை தொடர்பில் மருதங்கேணி பொலிஸாரிடம், வீட்டிற்கு வந்தது பொலிஸாரின் ஏதாவது பிரிவா என வினாவிய போது, அவ்வாறு யாரும் நேற்று முன்தினம் சோதனை நடவடிக்கையில் ஈடுபடவில்லை என பொலிஸார் தெரிவித்ததை அடுத்து, பொலிஸ் நிலையத்தில் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு