SuperTopAds

இரவில் இளவரசி டயானா செய்த ஒரு செயல்; அனைத்தையும் உலகுக்கு சொல்லிவிட்டது!

ஆசிரியர் - Editor II
இரவில் இளவரசி டயானா செய்த ஒரு செயல்; அனைத்தையும் உலகுக்கு சொல்லிவிட்டது!

ராஜ குடும்பத்தின் ஒரு உறுப்பினர் என்ற முறையில் இளவரசி டயானாவின் ஒவ்வொரு நடவடிக்கையும் கவனிக்கப்பட்டது, கட்டுப்படுத்தப்பட்டது.

அவர் அணிந்த உடை முதல் அவர் செய்த ஒவ்வொரு செயலும் பொதுமக்களால் விமர்சிக்கப்பட்டது பெரும்பாலும் நேர்மறையாக.

ஒரு இளவரசியாக ஏராளம் சட்ட திட்டங்களை அவர் பினபற்ற வேண்டியிருந்தது என்றாலும் 1994-ஆம் ஆண்டு எல்லாமே மாறிப்போயின.

இளவரசர் சார்லசுக்கு கமீலாவுடன் தொடர்பு இருப்பது தெரியவந்ததும் அவர்களது திருமணம் முறிந்து போனது.

இரண்டு பேருமே திருமண உறவுக்கு வெளியே வேறு நபர்களுடன் உறவு வைத்திருந்ததாக வதந்திகள் வெளியானாலும் இளவரசர் சார்லஸ் கமீலா உறவே பெரிய விடயமாக வெளியில் பேசப்பட்டது.

1994-ஆம் ஆண்டு சார்லஸ் ஒரு ஆவணப்படத்தில் தனது முறை தவறிய உறவு குறித்து பொதுமக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவித்தார்.

ஆனால் அன்று இரவு டயானா செய்த ஒரு செயல், அவரது தோற்றம், அவர் சொல்ல விரும்பிய அனைத்தையும் அவர் சொல்லாமலே உலகுக்கு சொல்லிவிட்டது.

தற்போது “பழி வாங்கும் உடை” என அழைக்கப்படும் அந்த கருப்பு நிற உடையுடன் டயானா வெளி உலகில் கால் வைத்தார், அதே இரவில் அவரது கணவர் தனது தவறான உறவு குறித்து தொலைக்காட்சியில் பேசிக்கொண்டிருக்க, இன்னொரு பெண்ணானால் தனது வீட்டிற்குள் பதுங்கியிருப்பார், ஆனால் டயானா தான் வலிமையானவள் என காட்டும் வண்ணம் வீட்டை விட்டு வெளியே வந்தார்.

ராஜ விதிகளுக்கு அடங்காதது என கூறி பல ஆண்டுகளாக அணியாமல் வைத்திருந்த அந்த உடையை அணிந்து கொண்டு டயானா வெளியில் வந்தார்.

அவரது உடை ராஜ விதிகளுக்கு முற்றிலும் மாறாக அவரது தோள்களை வெளிக்காட்டியவாறு அவரது முழங்கால் வரை மட்டுமே நீண்டிருந்தது.

ராஜ குடும்பத்தின் கெடுபிடிகளிலிருந்து அவர் விடுதலையாகி விட்டதாக கூறி மக்கள் அந்த உடையையும் டயானாவையும் மகிழ்ச்சியோடு மனதில் ஏற்றுக் கொண்டார்கள்.