யாழ்.பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் விபத்தில் பலி!

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் விபத்தில் பலி!

அம்பேபுஸ்ஸ - திருகோணமலை வீதியில் தலகிரியாகம பகுதியில் மோட்டார் சைக்கிளும் ரிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவர் பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், உயிரிழந்துள்ளதாக தலகிரியாகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (10) இடம்பெற்றுள்ளது.

பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 24 வயதான பெண் பொலிஸ் கான்ஸ்டபிளான இவர் விடுமுறையில் வீடு வந்திருந்தபோதே இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

ரிப்பர் வாகனத்தை செலுத்திய சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை தல்கிரியாகம பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு