'எல்லாவற்றையும் விட சிறுவர்கள் பெறுமதியானவர்கள்' எனும் தொனிப்பொருளில் சிறுவர் தின நிகழ்வு
'எல்லாவற்றையும் விட சிறுவர்கள் பெறுமதியானவர்கள்' எனும் தொனிப்பொருளில் சிறுவர் தின நிகழ்வு
"எல்லாவற்றையும் விட சிறுவர்கள் பெறுமதியானவர்கள்" எனும் தொனிப்பொருளின் கீழ் சிறுவர் தின நிகழ்வுகள் கல்முனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் திரு.ஜே.லியாகத் அலி தலைமையில் இடம்பெற்றது.
இன்று மதியம் 2.30 மணியளவில் ஆரம்பமான இந்நிகழ்வு மாணவர்களின் சித்திர போட்டி மற்றும் மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகளை உள்ளடக்கியதாக இடம்பெற்றதோடு அம்மாணவர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர், கணக்காளர்,பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் மற்றும் நிதி உதவி உத்தியோகத்தர், ஆசிரியர்கள், அமீனாஸ் ஜூவலரியின் பணிப்பாளர் திரு.கியாஸ்,பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவின் உத்தியோகத்தர்கள், கலாச்சார உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வுக்கு கலாச்சார பிரிவு, பெண்கள் பிரிவு , சிறுவர் பிரிவு அனுசரனை வழங்கியமை குறிப்பிடத்தக்கது