SuperTopAds

மணல் கள்ளர்களுக்கு உதவாவிட்டால் கஞ்சா வழக்கு போடுவேன் என மிரட்டும் யாழ்.பருத்தித்துறை பொலிஸ் அதிகாரி மீது விசாரணை...

ஆசிரியர் - Editor I
மணல் கள்ளர்களுக்கு உதவாவிட்டால் கஞ்சா வழக்கு போடுவேன் என மிரட்டும் யாழ்.பருத்தித்துறை பொலிஸ் அதிகாரி மீது விசாரணை...

பருத்தித்துறை பொலிஸ் அதிகாரி தொடர்பிலான விசாரணை உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் முன்னெடுக்கப்படுவதாக யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் மஞ்சுள செனரத்தெரிவித்தார்,

அண்மையில் யாழ்.மாவட்ட செயலகத்தில் கடற்தொழில் அமைச்சர் தலைமையில் இடம் பெற்ற சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தல் தொடர்பிலான கூட்டத்தின்போது பருத்தித்துறையில் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் வடமராட்சி கிழக்கில் களவாக மணல் ஏற்றுபவர்களுக்கு ஒத்துழைக்காவிட்டால் கஞ்சா வழக்கு போடுவேன் என அச்சுறுத்தல் விடுகின்றார் என தெரிவிக்கப்பட்டமை தொடர்பில் உரிய விசாரணை உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் முன்னெடுக்கப்படுவதாகவும் விசாரணைகள் முடிவுற்றதும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர்தெரிவித்தார்.