குளத்தில் மீன்பிடிக்க சென்ற ஒருவர் வள்ளம் கவிழ்ந்து உயிரிழப்பு!

முல்லைத்தீவு மாவட்டம் குமுழமுனைப்பிரதேசத்தில் குளத்தில் மீன்பிடிக்க சென்ற ஐவரில் வள்ளம் கவிழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று(08) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.குமுழமுனைப் பிரதேசத்தில் உள்ள ஆறுமுகத்தான்குளத்தில் நேற்று(08) நண்பகல் மீன்பிடிப்பதற்காக ஒரு வள்ளத்தில் ஐந்து பேர் சென்றுள்ளார்கள்.
உடலம் குளத்தில் மூழ்கி காணப்பட்டதால் நேற்று(08) மாலை 5.30 மணிவரை பிரதேச இளைஞர்கள் உடலத்தை தேடி சுழியோடி கண்டுபிடிக்கும் முனைப்பில் ஈடுபட்டு இறுதியில் உடலத்தை மீட்டுள்ளார்கள்.
ஆறுமுகத்தான்குள கிராமத்தை சேர்ந்த 26 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான இரத்தினம் உதயசங்கர் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.உடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலீஸார் தெரிவித்துள்ளார்கள்.