அம்பாறை விசேட தேவைகள் வலையமைப்பு நிறுவனத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்
ஆசிரியர் - Editor III
அம்பாறை விசேட தேவைகள் வலையமைப்பு (Ampara Special Needs Network) நிறுவனத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் தலைவர் வைத்தியர் எஸ்.எம்.எம்.எஸ். உமர் மௌலானா தலைமையில் சாய்ந்தமருது தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
சனிக்கிழமை(7) நடைபெற்ற இக்கூட்டத்தில் இதுவரை இடம்பெற்ற நிகழ்வுகளின் பகுப்பாய்வுடன் பழைய நிர்வாகம் கலைக்கப்பட்டு இரண்டு வருடங்களுக்கான புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது.
இப்புதிய நிர்வாகத்தின் தலைவராக வைத்தியர் எம்.ஜெ நௌபில் செயலாளராக எம்.ஆர்.எம். ஹமீம் பொருளாளராக பி.ஜெனிட்டா உம் பதில் தலைவராகபி.எம் சம்சுடீன் உப தலைவராக அதிபர் எம்.எச்.எஸ்.ஆர் மஜிதிய்யா வைத்தியர் வஜினா றபீக் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.
இந்நிறுவனமானது கடந்த 2007 ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு வலுவிழப்புடன் கூடிய நபர்களுக்காக சேவைகளை வழங்கி வருகின்றதுடன் பலதரப்பட்ட உள்ளூர் மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து இச்சேவையை இன்று வரை தொடராக மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.