SuperTopAds

பணிவிடை செய்தவர் பிரதமரா? -கைலாசாவில் ரஞ்சிதா மீது கடும் அதிருப்தியில் சீடர்கள்-

ஆசிரியர் - Editor II
பணிவிடை செய்தவர் பிரதமரா? -கைலாசாவில் ரஞ்சிதா மீது கடும் அதிருப்தியில் சீடர்கள்-

நித்தியானந்தாவின் கைலாசாவின் பிரதமராக ரஞ்சிதா நியமிக்கப்பட்டதற்கு சீடர்கள் கடும் அதிர்ப்தி வெளியிட்டு வருகின்றனர்.

இந்தியாவில் வழக்குகளில் தேடப்படும் நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓடிய நிலையில் கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கியதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

மேலும், அந்த நாட்டிற்கான தனி கடவுச்சீட்டு, பணம் மற்றும் கைலாசா சார்பில் பல்வேறு நாடுகளுக்கான தூதர்கள் என தனித்தனி பெண் சீடர்களையும் அறிவித்து பரபரப்பை எகிற வைத்தார்.

இதற்கிடையே கடந்த ஜூலை மாதம் கைலாசா நாட்டின் பிரதமராக நடிகை ரஞ்சிதாவை நித்யானந்தா அறிவித்ததாக கைலாசாவின் அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கங்களில் அறிவிப்பு வெளியானது.

அதன்பின் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள கைலாசா கிளைகளின் நிர்வாகத்திலும் ரஞ்சிதா தீவிரம் காட்டியதாக தகவல்கள் வெளியாகின. மேலும் நித்யானந்தாவை போல ரஞ்சிதாவும் பக்தர்களுக்கு சொற்பொழிவு ஆற்றிய வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வெளியாகின. இதனால் கைலாசவில் நித்யானந்தாவுக்கு அடுத்த இடத்தை பிடிக்க ரஞ்சிதா திட்டமிட்டு காய் நகர்த்தி வருவதாக இணையதளங்களில் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் அண்மைக்காலமாக ரஞ்சிதாவின் நடவடிக்கைகள் கைலாசாவில் உள்ள சீடர்கள் சிலருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

ஆரம்ப கட்டத்தில் நித்யானந்தாவுக்கு பணிவிடை செய்வதற்காக வந்தவர். மருந்து மாத்திரை எடுத்து கொடுத்தவர் எல்லாம் கைலாசாவில் தலைமை பொறுப்பிற்கு எவ்வாறு வரலாம்? என ஆதங்கப்பட்டு பேசி உள்ளனர்.

இதனால் ரஞ்சிதாவின் சொற்பொழிவு வீடியோக்களை சமூக வலைதளங்கள் பக்கங்களில் பதிவிடுவதையும், நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது.

தனக்கு எதிராக இதுபோன்று சில சீடர்கள் அதிருப்தியில் இருப்பதை அறிந்த ரஞ்சிதா தனக்கு என ஒரு ஆதரவு வட்டத்தை உருவாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

சீடர்கள் மத்தியிலேயே இரு பிரிவாக செயல்படுவது நித்யானந்தாவுக்கு புது தலைவலியை ஏற்படுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.