இ.போ.ச பேருந்து பாடாசாலை மினி பஸ் மீது மோதி விபத்து! 15 மாணவர்கள் உட்பட 26 பேர் காயம்...

ஆசிரியர் - Editor I
இ.போ.ச பேருந்து பாடாசாலை மினி பஸ் மீது மோதி விபத்து! 15 மாணவர்கள் உட்பட 26 பேர் காயம்...

இ.போ.ச பேருந்து ஒன்றும் மினி பஸ் ஒன்றும் இன்று (06) காலை விபத்துக்குள்ளானதில் 15 பாடசாலை மாணவர்கள் உட்பட 26 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பஸ்ஸுடன் பாடசாலை சேவையில் ஈடுபடும் மினி பஸ் மோதியதில் பாடசாலை பஸ்ஸில் பயணித்த சுமார் 15 மாணவர்கள் உட்பட 26 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


காயமடைந்தவர்கள் குளியாபிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குளியாப்பிட்டிய, ஹெட்டிபொல, கரந்திப்பல பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு