இ.போ.ச பேருந்தின் மீது மரம் சரிந்து வீழ்ந்ததில் 5 பேர் பலி, 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்...

ஆசிரியர் - Editor I
இ.போ.ச பேருந்தின் மீது மரம் சரிந்து வீழ்ந்ததில் 5 பேர் பலி, 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்...

கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டம் அருகில் பஸ் மீது மரம் விழுந்து ஏற்பட்ட அனர்த்தத்தில் படுகாயமடைந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பில் இருந்து தெனியாய நோக்கி பயணித்த பஸ் மீது கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சந்திக்கு அருகில் மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் 17 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 


விபத்து காரணமாக பஸ்ஸில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் பொலிஸாரும் விமானப்படையினரும் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இன்று (06) காலை 6 மணியளவில் கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு