யாழ்.சாவகச்சேரி நகரில் முறிந்து விழுந்த 200 ஆண்டுகள் பழமையான மரம்...

ஆசிரியர் - Editor I
யாழ்.சாவகச்சேரி நகரில் முறிந்து விழுந்த 200 ஆண்டுகள் பழமையான மரம்...

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி நகரிலிருந்த 200 ஆண்டுகள் பழமையான வேப்பமரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளது.

குறித்த வேப்பம்பரமானது A-9 வீதிக்கு குறுக்காக மின்சாரக் கம்பங்கள் மீது வீழ்ந்துள்ளது. அதனால் சாவகச்சேரி நகருக்கான மின்சாரம் தடப்பட்டுள்ளது.

மேலும், ஏ-9 வீதிப் போக்குவரத்து 30 நிமிடங்கள் தடைப்பட்டிருந்தன. 

இதனால் சிறு முயற்சியாளர் ஒருவரது பெட்டிக்கடையும், அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளும் சேதமடைந்துள்ளன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு