சீன வீடுகள் வேண்டாம். இந்திய வீடுகளே வேண்டும் கூட்டமைப்பின் கோரிக்கை ஏற்பு..
வடக்கு கிழக்கில் அமைக்கப்படவுள்ள 40 ஆயிரம் வீடுகளுக்கான ஒப்பந்த்த்தினை சீன அரசிடம் வழங்குவதனை உடன் நிறுத்தி இந்திய அரசிடம் கையளிக்க வேண்டும் என கூட்டமைப்பு பிரதமரிடம் விடுத்த கோரிக்கை பிரதமரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அபிவிருத்தி , நில விடுவிப்பு , மாவட்டத்தின் அவசிய தேவை தொடர்பில் பிரதமர் தலமையில் அலரிமாளிகையில் நேற்றைய தினம் விசேட சந்திப்பு இடம்பெற்றது.
குறித்த சந்திப்பிலேயே குறித்த விடயங்கள் உள்ளிட்ட பல விடயங்களிற்கு தீர்வு கூறப்பட்டதோடு மேலும் பல விடயங்கள் விரைவில் தீர்க்கப்படும் என்ற உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
இதன்போது விரைவில் அமைக்கும் 40 ஆயிரம் வீட்டுத்திட்டத்தினையும் சீன நிறுவனத்திடம் வழங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இருப்பினும் அந்த ஒப்புதல் இரத்துச் செய்து இந்தப் பெறுமதிக்குள் 12 லட்சம் ரூபாவில் குறித்த வீடுகளை அமைத்துதர இந்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு
அந்த கோரிக்கையினை இந்திய அரசு ஏற்றுக்கொண்டால் உடனடியாகவே இந்தியாவிடம் இத் திட்டத்தினை கையளிக்க வேண்டும். என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இக்கோரிக்கைக்கு அமைய உடன் அடுத்த கட்ட நடவடிக்கையினை மேற்கொண்டு மீண்டும் அமைச்சரவைக்கு பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் குடாநாட்டில் இளைஞர்களில் சுமார் 500 பேருக்காவது வேலை வாய்ப்பினை வழங்கும் வகையிலான ஓர் தொழிற்சாலையினை காங்கேசன்துறை சீமேந்து ஆலைப் பகுதியில் அமைக்க வேண்டும் என விடுத்த கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.