SuperTopAds

தியாக தீபம் திலீபனின் 36 ஆவது ஆண்டு நினைவேந்தல் அம்பாறையில் அனுஷ்டிப்பு

ஆசிரியர் - Editor III
தியாக தீபம் திலீபனின் 36 ஆவது ஆண்டு நினைவேந்தல் அம்பாறையில் அனுஷ்டிப்பு

தியாக தீபம் திலீபனின்  36 ஆவது ஆண்டு நினைவேந்தல் அம்பாறையில் அனுஷ்டிப்பு


தியாக தீபம் திலீபனின் 36வது நினைவேந்தலை முன்னிட்டு   தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் பொத்துவில் தொடக்கம் நல்லூர் வரையான திலீபன் நினைவு ஊர்திப் பயணம்   பொத்துவில்லில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியின்  அம்பாறை மாவட்டத் தலைவர் துசானந்தன் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின்  36 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் முதல் பெரிய நீலாவணை வரையான மக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு வெள்ளிக்கிழமை(15) முன்னெடுக்கப்பட்டிருந்தது.

யாழப்பாணம்   நல்லூர்   நோக்கிய பயணத்தின் முதலாம் நாளாகிய  நேற்று  தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட தியாக தீபம் திலீபனின்  திருஉருவப்படம் தாங்கிய ஊர்திக்கு  மக்கள் பெருந்திரளாக அஞ்சலி செலுத்தினர்.

தமிழ்த் தேசம், இறைமை, சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டி, இனப்படுகொலைக்கான சர்வதேச நீதி, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச நீதி, அரசியல் கைதிகளின் விடுதலை,பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கு, பௌத்த சிங்கள மயமாக்கலை நிறுத்த போன்ற தமிழர்களின் அபிலாசைகளை முன்வைத்து திலீபன் வழியில் வருகின்றோம் என்ற தொனிப்பொருளில் மேற்படி ஊர்திப் பவணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பொத்துவில்லில் ஆரம்பிக்கப்பட்ட இப்பவணியானது வடக்கு கிழக்கு மாகாணங்கள் தழுவிய ரீதியில் அனைத்து மாவட்டங்கள் ஊடாகவும் பயணித்து இறுதியில் யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள திலீபன் நினைவுத் தூபி வரை சென்று நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.அத்துடன் மாலை அம்பாறை மாவட்டத்தின் பாண்டிருப்பு திரௌபதை ஆலயத்தை வந்தடைந்து  மக்கள் அஞ்சலியுடன்   அம்பாறை மாவட்ட இவ்வூர்திப் பவணி  நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது கட்சியின்  பாராளுமன்ற உறுப்பினரும்  செயலாளருமான  செல்வராசா கஜேந்திரன் ,கட்சியின் முக்கியஸ்தர் சட்டத்தரணி காண்டீபன், தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ்  உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.