விஜயலட்சுமியின் பாலியல் முறைப்பாடு -சீமான் இன்றும் ஆஜராகவில்லை-

ஆசிரியர் - Editor II
விஜயலட்சுமியின் பாலியல் முறைப்பாடு -சீமான் இன்றும் ஆஜராகவில்லை-

நடிகை விஜயலட்சுமி பதிவு செய்த பாலியல் முறைப்பாடு குறித்து நேரில் ஆஜராக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அழைப்பு அனுப்பப்பட்ட போதும், அவர் இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைகளுக்காக ஆஜராகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக சீமான் மீது 2011 ஆம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி முறைப்பாடு பதிவு செய்த நிலையில், அண்மையில் சென்னை பொலிஸ் ஆணையர் அலுவலகத்தில் மீண்டும் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்தார். 

இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு செப்டம்பர் 9 ஆம் திகதி நேரில் ஆஜராக வளசரவாக்கம் பொலிஸ் நிலைய பொலிஸார் சீமானுக்கு அறிவுறுத்தல் அனுப்பிய நிலையில், வெளியூர் செல்வதால் இன்று செவ்வாய்க்கிழமை ஆஜராவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், விசாரணைக்கு சீமான் இன்று ஆஜராகாத நிலையில், அவரது சட்டத்தரணிகள் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் கொடுத்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு