SuperTopAds

இந்தியா சென்ற பைடன் மோடியுடன் பேச்சுவார்த்தை

ஆசிரியர் - Editor II
இந்தியா சென்ற பைடன் மோடியுடன் பேச்சுவார்த்தை

ஜி-20 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அமெரிக்க ஜனாதிபதியான பின் அவர் இந்தியா செல்வது இதுவே முதல்முறை. 

இன்று வெள்ளிக்கிழமை இரவு சுமார் 7 மணி அளவில் புதுடெல்லி விமான நிலையம் சென்றடைந்த அவரை, மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே. சிங் வரவேற்றார். 

இதையடுத்து, ஜனாதிபதி ஜோ பிடன், பிரதமர் நரேந்திர மோடி அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்தார். அப்போது, இருதரப்பு உறவை மேம்படுத்துவது தொடர்பாக இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். 

இந்தியாவில் ஜெட் என்ஜின்களை கூட்டாக தயாரிக்கும் ஒப்பந்தத்தின் முன்னேற்றம், MQ-9B ஆயுதம் தாங்கிய ஆளில்லா விமானங்களை வாங்குதல், சிவில் அணுசக்தி பொறுப்பு மற்றும் வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தம் ஆகியவை இந்த சந்திப்பின்போது பேசப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.